திருவுச்சாத்தானம் (கோயிலூர்)-மந்திரபுரீஸ்வரர் (சூதவனப்பெருமான்)


இறைவர் திருப்பெயர் : மந்திரபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பிருகந்நாயகி, பெரியநாயகி.
தீர்த்தம் : அநுமன் தீர்த்தம், மாக்கண்டேய தீர்த்தம்,
கிராமம்/நகரம்கோவிலூர் :
முகவரி:

மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய ஊர்களிலிருந்து முத்துப்பேட்டைக்குப் பேருந்துகள் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடி சாலையில் 2 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம்.

தல வரலாறு:

காசிப முனிவரின் மனைவி வினதை. இவர்களது மகன் கருடன். ஒரு முறை இவன் தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அமிர்த கலசத்தை எடுத்து வருகிறான். இதைப்பார்த்த இந்திரன் பின் தொடருகிறான்.

கருடன் வேகமாக வந்ததால் கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தியது. அவ்வாறு சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றி சூதவனமாக காட்சி தருகிறது. இந்த வனத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால், சிவன் வெண்மை நிறமாக காட்சி தருகிறார்.

பதஞ்சலி முனிவரின் அருளால் இந்த காடுகள் அழிக்கப்பட்டு கோயில் உருவானது. ராமபிரானுக்கு மந்திர உபதேசம் வழங்கியதால் இறைவன் சற்று இடதுபுறம் சாய்ந்தும், குனிந்தும் காணப்படுகிறார்.

தல சிறப்பு :


ராமர் இலங்கை செல்லவும், போரில் வெற்றி பெறவும் வேதாரண்யம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய மூன்று இடங்களில் அணை கட்டுகிறார். கடல் அலைகளும் மீன்களும் அணையை கரைத்து விடுகின்றன.

தடைகளை நீக்க வேண்டி ராமர் இத்தலம் வந்து மந்திர ஆலோசனை பெற்று ராமமேஸ்வர கடலில் பாலம் கட்டியதாகவும், இந்த அணையே நிலையாக இருந்தது என்று வரலாறு கூறுகின்றன. எனவே இறைவன் "மந்திரபுரீஸ்வரர்' என வழங்கப்படுகிறார். ராமர் இத்தல இறைவனிடம் கடலில் அணைகட்டுவதற்குரிய வழிவகைகளை உசாவிய (கேட்டு தெரிந்து கொண்ட) இடமாதலால் இத்தலத்திற்கு "திருவுசாத்தானம்' என பெயர் ஏற்பட்டது.

பாற்கடலில் அமிர்தம் கடையும் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது.

மார்க்கண்டேயர் தன் மீது எமன் வீசிய பாசக்கயிறின் வடுக்கள் நீங்குவதற்காக இங்கு திருக்குளம் அமைத்து வழிபாடு செய்துள்ளார். சிதம்பரத்தில் சாயரட்சை நேரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை காணமுடியாமல் வருந்திய விஸ்வாமித்திரர் இத்தலம் வருகிறார். இவரது வருத்தத்தை போக்க இங்கு நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது, சிதம்பரத்தில் ஆடிய தாண்டவத்தை விஸ்வாமித்திரருக்கு இறைவன் காட்டுகிறார். எனவே இத்தலம் சிதம்பரத்திற்கு இணையாக கோயில் ஆனதால், ஆதிசிதம்பரம் என்றும் கோவிலூர் எனவும் அழைக்கப்படுகிறது.

சிறப்பம்சம்:

வெண்மை நிறத்துடன் அமிர்த சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்





மாவட்டம் திருவாரூர்
தலபுராணம் - சூதவனப் புராணம் உள்ளது.

கிராமம்/நகரம் கோவிலூர்

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 107வது தலம்.

தீர்த்தம் : அநுமன் தீர்த்தம், மாக்கண்டேய தீர்த்தம்,

திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

புராண பெயர் திருவுசாத்தானம், கோயிலூர்

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ராமருக்கு வெற்றி கிடைத்த தலமாதலால் இத்தலத்தை நினைத்தாலே வெற்றி. வேத மந்திரங்கள் படிப்பவர்கள் இத்தல இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. அஷ்டாவக்ர முனிவரால் நீங்கியது.

சம்பந்தர்

தேவாரப்பதிகம்

நீருடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அநுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.


வழக்கமாக எருமை தலையின் மீது அருள்பாலிக்கும் துர்கை, இத்தலத்தில் எருமை இல்லாமல் அருள்பாலிக்கிறாள்.

தில்லைக் கூத்தபிரான், இங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும் காரணத்தால் இது கோயிலூர் ஆயிற்று என்றும் கூறுவர்.

1081 ஏக்கர் நன்செய், 1018 ஏக்கர் புன்செய் நிலங்களும் - தென்னந்தோப்புக்களும், 36 கபடிடஸ்களும், 229 மனைக்கட்டுக்களும் இக்கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன. (இக்கோயில் நிர்வாகத்தில் முத்துப்பேட்டையில் அருள்மிகு பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெறுகிறது.) - (ஆதாரம் - தலவரலாறு.)

இறையிலியாக நிலங்களும், தோப்புக்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகின்றன.

கல்வெட்டுக்களில் சுவாமியும் அம்பாளும் 'திருவுசாத்தானமுடைய நாயனார், பெரிய நாச்சியார் ' என்னும் திருநாமங்களால் குறிக்கப்படுகின்றனர்.

முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

சிதம்பரத்தில் சாயரட்சை நேரத்தில் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை காணமுடியாமல் வருந்திய விஸ்வாமித்திரர் இத்தலம் வருகிறார். இவரது வருத்தத்தை போக்க இங்கு நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது, சிதம்பரத்தில் ஆடிய தாண்டவத்தை விஸ்வாமித்திரருக்கு இறைவன் காட்டுகிறார். எனவே இத்தலம் சிதம்பரத்திற்கு இணையாக கோயில் ஆனதால், ஆதிசிதம்பரம் என்றும் கோவிலூர் எனவும் அழைக்கப்படுகிறது.

தல விருட்சம் மா மரம்

சித்ரா பவுர்ணமியில் பிரமோற்சவம் நடக்கிறது. ஆனியில் நடராஜர் திருமஞ்சனமும், ஆடிப்பூரத்தில் அம்மன் புறப்பாடும், ஆவணி மூலத்தில் அபிஷேக ஆராதனையும், சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஐப்பசி அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை ஆகிய நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் 5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரங்களுடன் விளங்குகிறது. கோயிலின் மேற்கு பகுதியில் வருணன் பூஜித்த லிங்கம், ராமர் பூஜித்த லிங்கம், மார்க்கண்டேயர் பூஜித்த லிங்கம், விஸ்வாமித்திரர் பூஜித்த லிங்கம் உள்ளது.

மிகவும் பழமையான கோயில் என்பதால் இங்கு நவகிரகம் கிடையாது. நவகன்னிகைகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள்.


அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர் - முத்துப்பேட்டை - 614 704. திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம்.

தற்போது மக்கள் "கோயிலூர்" என்றழைக்கின்றனர். கோயிலூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதாலும், இவ்வூர் முத்துபேட்டைக்கு அருகில் இருப்பதாலும் வழக்கில் இத்தலம் "முத்துப்பேட்டை - கோயிலூர்" என்று வழங்கப்படுகின்றனர்.

நவ கன்னி


கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று திருவடிகளுடனும் காட்சித் தருகிறார்- அழகான உருவம் தரிசிக்கத் தக்கது.
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாக வரலாறு. இதன் காரணமாகவே இறைவன் திருப்பெயர் மந்திரபுரீஸ்வரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான் இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்த) காரணத்தால் இத்தலம் 'உச்சாத்தானம்' என்று பெயர் பெற்றது. (இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், சாம்பவான் ஓடை, அநுமன் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன.) இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது.


இத்தல விநாயகரின் திருநாமம் சூதவன விநாயகர்.